கட்சிகளின் சின்னங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்.!

கட்சிகளின் சின்னங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்.!

Update: 2020-12-15 09:01 GMT

தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய  கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.  நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேலும் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் குக்கர் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த கட்சிகளுக்கு கடந்த  தேர்தல்களிலும் இதே சின்னங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Similar News