'குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக நிற்கின்றனர்' - என் பிரதமர் மோடி இப்படி குறிப்பிட்டார்?

'குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கின்றன' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-06-04 13:15 GMT

'குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கின்றன' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் உத்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு பிரிவில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்த விழாவின்போது 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, 'தேவையற்ற சட்டங்களை நாங்கள் அகற்றி விட்டோம், நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும். குடும்ப கட்சிகள் அரசியலில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் திறமைசாலிகளை அடக்கி முன்னேற விடாமல் தடுக்கிறது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள என்ற குடும்ப உறுப்பினர்கள் எனக்கு எதிராக ஒன்றுபடுகிறார்கள்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்துள்ளது, இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேசம் உத்வேகத்தை கொடுக்கும்' என்றார்.


Source - Junior Vikatan

Similar News