வாக்காளர் பட்டியலில் முறைகேடு என நீதிமன்றம் ஓடிய எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி - தோல்வி பயமா?

வாக்காளர் பட்டியலில் முறைகேடு என நீதிமன்றம் ஓடிய எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி - தோல்வி பயமா?

Update: 2020-12-17 18:10 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் யாருடன் கூட்டணி, வேட்பாளர், அறிக்கை, கூட்டங்கள், மாநாடுகள், வாக்குறுதிகள், ,விளம்பரங்கள் என பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் ஒரே ஒரு கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி என நீதிமன்றம் சென்றுள்ளது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அவகாசம் அளிக்கப்பட்டது. 

ஆனால் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் செந்தில்பாலாஜி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சில அரசியல் ஆர்வலர்களை கேட்டபோது "தோல்விக்கான காரணம் என்ன சொல்வதென்று தி.மு.க இப்பொழுதே முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது" என்றனர்.

Similar News