ரஜினிகாந்த் அரசியல் வருகையில் குழப்பம் ஏற்படுத்த துவங்கிய ஸ்டாலின் - தோல்வி பயமா?

ரஜினிகாந்த் அரசியல் வருகையில் குழப்பம் ஏற்படுத்த துவங்கிய ஸ்டாலின் - தோல்வி பயமா?

Update: 2020-12-08 09:33 GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியை துவக்க இருக்கும் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. ஆனால் பத்து வருடமாக ஆட்சியில் இல்லாமல் இந்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை கைபற்றி விடலாம் என்ற ஆசையில் இருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை பற்றி ஊரே பேசும்போது அமைதியாக இருந்தார், ஆனால் தற்பொழுது அதனை பற்றி வாய் திறந்துள்ளார்.

அதாவது திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி மேற்பார்வையாளாராக பதவியில் இருக்கும் தமிழருவி மணியன் பற்றி திரு.ரஜினிகாந்த் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், "தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம் என, ரஜினி வருத்தப்பட்டதாக தனக்கு தகவல் வந்தது" எனத் தெரிவித்தார். 

கிட்டதட்ட கட்சி அறிவித்ததில் இருந்து இரண்டு ஆண்டு காலம் அதனை பற்றிய கலந்தாய்வு, ஆழ்ந்த யோசனை, நிறைய சந்திப்புகள் என திரு.ரஜினிகாந்த் அவர்கள் காலத்தை செலவழித்துதான் கட்சி பற்றிய அறிவிப்பும் தமிழருவி மணியனை பதவியிலும் அமர்த்தியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் உடனே முண்டியடித்துக்கொண்டு அரசியல் லாபத்திற்காக அறிக்கை விடும் ஸ்டாலின் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி துவக்கம் பற்றி அறிவிப்பு வந்து 4 நாள்கள் கழித்தே அதுபற்றி வாய் திறந்துள்றார். அதுவும் கலகமான கருத்து. இவ்வளவு யோசித்த திரு.ரஜினிகாந்த் தமிழருவி மணியனை பற்றி யோசிக்காமலா பதவியை கொடுத்திருப்பார்.

உள் ஒன்று வைத்து மறைமுகமாக பேச தெரியாதவர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஆனால் அவர் மனதிற்குள் வருத்தப்படதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கூறினாரா? அப்படி திரு.ரஜினிகாந்த் நினைத்திருந்தால் தமிழருவி மணியனுக்கு பதவியே வந்திருக்காது. தனது அரசியல் லாபத்திற்காக திரு.ரஜினிகாந்த் அவர்களிடம் நேரடியாக எதிர்க்க வலிமை இல்லாமல் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய தி.மு.க தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார் என பலரின் கருத்தாக உள்ளது.

Similar News