கடைசியாக சசிகலா ஐநா சபைக்குத்தான் போகனும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பொளேர்.!

கடைசியாக சசிகலா ஐநா சபைக்குத்தான் போகனும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பொளேர்.!

Update: 2021-02-04 20:02 GMT

பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், கடந்த 31ம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அப்போது அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது: கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

மேலும், அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த டிடிவி தினகரன் விலகி கொண்டார். அதே போன்று சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அதனையும் தள்ளுபடி செய்யப்பட்டது. இனிமேல் சசிகலா ஐநா சபையில் சென்றுதான் முறையிட வேண்டும் எனக் காமெடியாக கூறினார்.

Similar News