அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் காலமானார்.. அரசியல் பிரமுகர்கள் இரங்கல்,!

அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் காலமானார்.. அரசியல் பிரமுகர்கள் இரங்கல்,!

Update: 2020-11-23 18:45 GMT

கொரோனா தொற்றால் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகெய் 84, சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். அதன் பிறகு மீண்டும் அவர் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். 


கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தருண் கோகெய் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கவுகாத்தியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையின் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.


இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவம்பர் 2ம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தருண் கோகெயின் உடல் நிலை இன்று மிக மிக கவலைக்கிடமான இருப்பதாகவும், மருத்துவர்கள் அவர்களால் இயன்றதை முயன்று வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர், 2001 முதல் 2016 வரையில் அசாம் மாநில முதலமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் முதலமைச்சர்களில் அதிக காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News