ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி!

ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி!

Update: 2021-01-16 13:08 GMT

தமிழகத்தில் பா.ஜ.க அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக அவ்வபோது பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் பா.ஜ.க'வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க'வில் இணைத்துக்கொண்டார்.

சென்னை மதுரவாயலில் பா.ஜ.க. சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா' என்ற பெயரில் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக பாரம்பர்ய உடையான 
வேட்டி, சட்டையில் வந்திருந்த நட்டா, தமிழில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசும்போது, "விவசாயிகளின் விழா இது. உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பா.ஜ.க பெரிய சக்தியாக வரும்" என்றார்.

அந்த விழாவில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார். பின் பா.ஜ.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "உலகமே வியந்து பார்க்கக்கூடிய வகையில் பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கைகள் இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் அவருடைய அணுகுமுறையை பார்க்கையில், ஒரு சிறந்த தலைவராக தெரிகிறார். அவருக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் என்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டேன். என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன்" என்றார்.

Similar News