தமிழக பாஜக பொறுப்பாளருடன், திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.!

தமிழக பாஜக பொறுப்பாளருடன், திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.!

Update: 2020-11-21 10:12 GMT

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை, திமுக முன்னாள் எம்.பி. ராமலிங்கம் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் மு.க.அழகிரி ஆதரவாளராக கருதப்படுபவர் ஆவார். மேலும், கட்சியில் விவசாய அணிச் செயலாளராக இருந்தவர். இதற்கு முன்னர் அதிமுகவில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். திமுகவில் மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா தொற்று பரவிய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவருக்கு நேர் எதிராக இவர் செயல்பட்டார். இதன் காரணமாக திமுக உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது நிஜமாகியுள்ளது. தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News