'தி.மு.க வெற்றி பிச்சை' என பேசிய விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா'விற்கு ஜாமீன்.

பிரதமர் மோடியை தரக்குறைவாகவும் பேசியது மட்டுமல்லாமல் தி.மு.க வெற்றி பெற்றது சிறுபான்மையினரின் பிச்சை என்றும் கூறினார்.

Update: 2021-08-10 23:45 GMT

இருதய நோயாளி என கூறி பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா'விற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா பற்றி இழிவாகவும், பிரதமர் மோடியை தரக்குறைவாகவும் பேசியது மட்டுமல்லாமல் தி.மு.க வெற்றி பெற்றது சிறுபான்மையினரின் பிச்சை என்றும் கூறினார்.

இதனையடுத்து தி.மு.க'வினர் கண்டுகொள்ளாவிட்டாலும் தமிழக பா.ஜ.க போராட்டத்தில் இறங்கியது. இந்த போராட்டத்தின் விளைவாக தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கடந்த 24'ம் மதுரையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார், இந்த மனுவின் மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்" எனவும் ஜாமீன் அளித்தார்.

மேலும், "இனி வரும் காலங்களில் மதம், அரசியல் சம்மந்தமான விஷயங்களில் அமைதியை குலைக்கும் வகையில் பேசக்கூடாது" எனவும் எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி.


Source - Assistant News

Tags:    

Similar News