வங்காளத்தை 5 ஆண்டு எங்களிடம் கொடுங்கள்.. தங்கம் போன்ற மாநிலமாக மாற்றுவோம்.. அமித்ஷா பேச்சு.!

வங்காளத்தை 5 ஆண்டு எங்களிடம் கொடுங்கள்.. தங்கம் போன்ற மாநிலமாக மாற்றுவோம்.. அமித்ஷா பேச்சு.!

Update: 2020-12-19 20:23 GMT

மேற்கு வங்காள சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு மேற்கு வங்காளம் சென்றார்.

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது அமைச்சர், எம்.எல்.ஏ., பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகுவதாக கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி, மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் இன்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் இன்று இணைந்துள்ளார். அவருடன் 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிபூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் 3 தசாப்தங்களாக ஆட்சி செய்தது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 27 ஆண்டுகளும், சகோதரி மம்தாவுக்கு 10 ஆண்டுகளும் மக்களாகிய நீங்கள் அளித்தீர்கள். அதே போன்று பாஜகவுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். தங்கம் போன்ற மாநிலம் ஆக மேற்கு வங்காளம் மாற்றப்படும் என பேசினார். புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விரைவில் மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி மலரும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News