தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சொத்துவரியை 150 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் தற்போது மீண்டு வரும் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
மேலும், வரி உயர்வுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியில் மீண்டு வருகின்றனர். இந்த தருணத்தில் சொத்து வரியை உயர்த்தியிருப்பது பெதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற 22ம் தேதி காலை 10 மணியளவில நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே போன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy:India Today