தபால் ஓட்டை எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது.. ஹெச்.ராஜா ட்வீட்.!

கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் படுத்தியுள்ளது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-03-02 05:01 GMT

கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் படுத்தியுள்ளது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதே போன்று தபால் வாக்கு முறை கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஏற்கனவே தேர்தல் பணியில் உள்ளவர்கள் ரயில்வே போன்று அத்தியாவசிய பணிகளில் உள்ள 10 வகையினர் தபால் ஓட்டு போடலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. கொரோனா காரணமாக 80 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என்பதை திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Similar News