2 நாள் பயணம் முடிவுற்றது.. சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

2 நாள் பயணம் முடிவுற்றது.. சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

Update: 2020-11-22 11:04 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். பல ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிக்கப்பட்ட திட்டங்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்நிலையில், இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அமைச்சர் விமான நிலையம் செல்லும்வரை பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் நின்று வழியனுப்பி வைத்தனர். தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டு அமைச்சர் சென்றார். 


மத்திய அமைச்சர் வருகையால் தமிழக பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள் என்று அக்கட்சியின் தமிழக பாஜக தலைவரின் நம்பிக்கையும்கூட.

Similar News