"என்ன அறநிலையத்துறை கல்வி நிலையங்களில் பிற மதத்தினர் வேலை செய்ய கூடாதா?" ஷாக் அடித்தது போல் கதறும் மதம் மாறியவர்கள் !
அறநிலையத்துறை சார்பில் தொடங்க உள்ள சென்னை கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பிற்கு பிற மதத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதம் மாறிய பிற மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான ஒரு செயல் என்கிறார். மேலும் இது போன்ற ஒரு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளுமானால் அது இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளதாகவே கருத முடியும் என்று கூறுகிறார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் நடத்தி வரக்கூடிய பள்ளிகள் கல்லூரிகளில் பல இந்துக்கள் பணியாற்றி வருவதையும் மதம் மாறிய பிற மதத்தினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.