ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை.. கமல் என்ன சொல்கிறார்.!

ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை.. கமல் என்ன சொல்கிறார்.!

Update: 2020-12-16 16:11 GMT

தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில்: கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பேசி முடிவெடுப்போம்.

ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்சினை. இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

Similar News