'எனக்கா ஓய்வா?' - தன்னுடைய ஓய்வு குறித்து பிரதமர் மோடி கூறியது என்ன?

'இனி நான் ஓய்வெடுக்கலாம் என நினைக்கவில்லை மக்களுக்கான நலத்திட்டங்கள் 100% அவளை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-05-13 11:49 GMT

'இனி நான் ஓய்வெடுக்கலாம் என நினைக்கவில்லை மக்களுக்கான நலத்திட்டங்கள் 100% அவளை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 'எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை நான் சந்தித்தேன் அவர் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்தாலும் நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'இன்னொரு நாள் அவர் என்னை சந்தித்து சில பிரச்சினைகளை பற்றி பேச வந்தார் அப்பொழுது அவர் நாடு உங்களை இரண்டு முறை பிரதமர் ஆகி இருக்கிறது இதற்கு மேல் என்ன வேண்டும்? எனக் கேட்டார்.

'ஒருவர் இரண்டு முறை பிரதமராக பொறுப்பு வகித்தால் அவர் அனைத்தையும் சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் மோடி சற்று வித்தியாசமான படைப்பு. என்பது அவருக்குத் தெரியாது இனிமேல் நான் ஓய்வெடுக்கலாம் என நினைக்கவில்லை மக்களுக்கான நலத்திட்டங்கள் 100% அவளை சென்றடைவதை உறுதி செய்வது என்பது எனது கனவு' என்றார் பிரதமர் மோடி.


Source - Junior Vikatan

Similar News