"காந்தியை கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர் யார்?" - தி.மு.க'வை சீண்டும் காங்கிரஸ் பேனர்

இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என சாயல்குடியில் காங்கிரஸார் வைத்துள்ள பேனரால் பரபரப்பு நிலவி வருகிறது.

Update: 2022-05-22 05:45 GMT

இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என சாயல்குடியில் காங்கிரஸார் வைத்துள்ள பேனரால் பரபரப்பு நிலவி வருகிறது.


இரு தினங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழக அரசியல் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது குறித்து காங்கிரசார் வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸார் பேனர் வைத்துள்ளனர். அதில் பேரறிவாளன் விடுதலை ஆனால் இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என்றும், நெஞ்சு பொறுக்குதில்லையே தலைவா உன் இழப்பு என்ற வாசகத்துடன் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பாக, 'தமிழக அரசே எங்கள் கேள்வி என்னவென்றால் தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த நபர் யார்? என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவர்கள், காமராஜர், கே.எஸ்.அழகிரி, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பேனரின் அடிப்பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட ராகுல்காந்தியின் முரட்டு பக்தர்கள் எனவும் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பேனர் அப்பகுதியிலுள்ள தி.மு.க'வினரை கொதிப்படைய செய்துள்ளது. 


Souce - News 18 Tamil Nadu

Similar News