'குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் தி.மு.க குடுக்கலைன்னா நான் அ.தி.மு.க'விற்கு ஒட்டு போடுவேன்' - சவால் விட்ட ஆ.ராசா

'தி.மு.க ஆட்சிக் காலம் முடிவடையும் போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட வில்லை எனில் அ.தி.மு.க'வுக்கு நானே ஓட்டு போடுகிறேன்' என தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-14 09:15 GMT

'தி.மு.க ஆட்சிக் காலம் முடிவடையும் போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் அமல் படுத்தப்படவில்லை எனில் அ.தி.மு.க'வுக்கு நானே ஓட்டு போடுகிறேன்' என தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க ஆட்சி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமல் உள்ளது, குறிப்பாக குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தி.மு.க'வின் முக்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் பல மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.


இந்தநிலையில் தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியதாவது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கப்படும் என சொன்னோம் 5 ஆண்டுகள் முடியும் பொழுது தி.மு.க தேர்தல் அறிக்கையை எடுத்துப் படியுங்கள் அப்போது இந்தத் திட்டங்களில் ஒன்று நிறைவேற்றாமல் அதனை நீங்கள் கேள்வி கேட்கலாம்! ஐந்தாண்டுகள் முடியும் பொழுது தி.மு.க'வின் தேர்தல் அறிக்கை எடுத்து பாருங்கள் அப்போது ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படவில்லை என எடப்பாடி புகார் கூறினால் நானே அ.தி.மு.க'வுக்கு ஓட்டு போடுகிறேன்' என கூறினார்.


தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டம், குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது குறித்து நிதிநிலை சரியில்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிவரும் நிலையில் தி.மு.க எம்.பி ஆ.ராசா குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கண்டிப்பாக வழங்குவோம் என கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Source - Daily Thanthi

Similar News