நாங்குநேரி தொகுதியில் குறையாத தி.மு.க உட்கட்சிப்பூசல் - தலையில் அடித்துக்கொள்ளும் உ.பிஸ்!

நாங்குநேரி தொகுதியில் குறையாத தி.மு.க உட்கட்சிப்பூசல் - தலையில் அடித்துக்கொள்ளும் உ.பிஸ்!

Update: 2020-12-02 12:37 GMT
தி.மு.க உட்கட்சி பூசலால் நாங்குநேரி தொகுதியில் உடன்பிறப்புகள் அடித்துக்கொள்கிறார்கள். இவர்களில் யாரையாவது ஒதுக்கி வேறு யாருக்காவது சீட் குடுத்தால் உடன்பிறப்புக்களே தி.மு.க-வை தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து விடுவார்கள் என இப்பொழுதே பேச்சுக்கள் பரவ துவங்கியுள்ளன.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரசின் வசந்த குமார் கடந்த எம்.பி தேர்தலின்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனை தொடர்ந்து காலியான நாங்குநேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரசின் ரூபி மனோகரனை தோற்கடித்து அ.தி.மு.க-வின் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ ஆனார்.

ஆனால், தற்பொழுது வரும் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தரப்பில் இப்போதே ஒன்றிற்கும் மேற்பட்டோர் "நான்தான் வேட்பாளர். தலைமை சிக்னல் கொடுத்து விட்டது" என ஆளாளுக்கு பெருமை பேசி வருகின்றனராம்.

கடந்த 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொகுதியில் தி.மு.க போட்டியிடவில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது ஸ்டாலினிடம் இது பற்றி அந்த தொகுதி உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்த போது அவரும் சரி என கூறியுள்ளார்.

இதனால் தொகுதிக்குட்பட்ட களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் தீயாக இறங்கி வேலை பார்க்க துவங்கியுள்ளார். இதற்கிடையில் இதற்கு போட்டியாக கனிமொழியின் ஆதரவாளர் ஆரோக்கிய எட்வின் "தொகுதி எனக்குத்தான் மேடம் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்" என தனியாக உடன்பிறப்புகளிடம் பெருமை பேசி வருகிறாராம்.

இதற்கிடையில் ஸ்டாலினின் கிச்சன் கேபினட்டை பிடித்த குஷியில் தி.மு.க வர்த்தக அணி துணைத்தலைவலர் கிராகம்பெல்லோ "தொகுதி எனக்குதான் தலைவர் வீட்டு கிச்சன் கேபினட் எனக்குதான் ஆதரவு" என ஏக குஷியில் வலம் வருகிறார்.

இவர்களையெல்லாம் தாண்டும் விதமாக போன தேர்தலில் தோற்ற காங்கிரஸின் ரூபி மனோகரனும் "ஸ்டாலின் எனக்குதான் சீட்டு என கூறியுள்ளார்" என பெருமைபட தொகுதி முழுவதும் பேசி வருகிறார். 

இப்படி உள்ளூர் ஆட்களை எல்லாம் கொம்பு சீவி தி.மு.க நாங்குநேரி தொகுதியில் குளிர்காய்ந்து வருகிறது.

Similar News