உத்திர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு டாடா சொன்ன சமாஜ்வாதி - தமிழகத்திலும் கல்தாவா?

உத்திர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு டாடா சொன்ன சமாஜ்வாதி - தமிழகத்திலும் கல்தாவா?

Update: 2020-11-14 19:30 GMT

உத்திர பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி கிடையாது என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

சில சிறிய கட்சிகளுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மற்றபடி பெரிய கட்சிகள் எதனுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதையடுத்து மற்ற மாநிலங்களை போல் உத்திர பிரதேசத்திலும் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து சவாரி செய்யலாம் என்ற கனவு டமாலாகி போயுள்ளது.

பீகார் தேர்தலில் மகா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டும் வென்று படுதோல்வி அடைந்தது. இதனால் தன் முதல்வர் கனவு பனால் ஆன தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் கட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியை அடுத்து தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை தி.மு.க கூட்டணியில் இருந்து கழட்டி விட ஆயத்தமாவதாக செய்திகள் வருகின்றன. கதர் சட்டைகள் நொந்து போயுள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் சொல்கிறது.

Similar News