செல்லும் இடமெல்லாம் சேதாரமாகும் தி.மு.கவினர் - பாவமா? சாபமா?

செல்லும் இடமெல்லாம் சேதாரமாகும் தி.மு.கவினர் - பாவமா? சாபமா?

Update: 2020-12-23 14:19 GMT

தி.மு.கவினர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினரிடம் ஏதாவது பேசி பிரச்சினையாகி மக்கள் ஓடவிடும் அளவிற்கு ஆகி விட்டது அண்ணாதுரை துவங்கிய, கருணாநிதி வளர்த்தெடுத்த கட்சியின் நிலைமை.

தேர்தல் சமயத்தில் சமயோசிதமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு ஏதாவது பேசி விடுவதால் ஏற்கனவே தி.மு.க என்றால் கோபமாக உள்ள மக்களின் எரிகிற எண்ணத்தில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிடுவதால் மக்கள் தி.மு.க'வினரை ஓட ஓட விரட்டி அடிக்கும் நிகழ்வு நடந்தேறிவிடுகிறது.

அந்த வகையில் சில நாட்கள் முன் தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் மக்கள் மத்தியில் தவறாக வார்த்தையை விட்ட காரணத்தால் மக்கள் அடிக்க துரத்த காவல்துறை மற்றும் கட்சியினர் பாதுகாப்புடன் அங்கிருந்து விட்டால் போதும் என தப்பித்து ஓடினார். 

அது போலவே நேற்று முன்தினம் சிதம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் ஆட்களே இல்லாமல் வெறும் நாற்காலிகளை பார்த்து பேச வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. சரி பேசிவிட்டு செல்வோமே என செல்லாமல் உதயநிதி தொண்டர்களுக்கு கைகொடுத்து பந்தா பண்ணும் வேளையில் உதயநிதியை நம்பி மனு அளிக்க வந்த அப்பாவி கோபமடைந்தார்.

பின் தான் கொண்டு வந்த மனுவை உதயநிதியின் முகத்தில் குறி பார்த்து வீசி விட்டு சென்றார். உடனே உதயநிதி கட்சியினர் மற்றும் பாதுகாவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார்.

இதே போல் நேற்று ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காரில் வந்துள்ளார். வந்த இடத்தில் சுவாரஸ்யமாக பேசுகிறேன் என்ற பெயரில் "பாட்டாளி மக்கள் கட்சிக்கு குடுப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை" என வார்தைகளை விட கோபமடைந்த பா.ம.க'வினர் தயாநிதியை கூட்டத்தில் இருந்து கிட்டதட்ட மீட்கும் அளவிற்கு வளைத்து பிடிக்க துவங்கிவிட்டனர்.

தயாநிதியின் விலை உயர்ந்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர். பின் காவல் துறை மற்றும் பாதுகாவலர்கள் துணையுடன் காரில் வந்த தயாநிதி ரயில் வண்டியில் ஏறி சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டது.

இந்த தொடர் சம்பவங்களால் தி.மு.க'வினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஒருபுறம் ஆளும் அ.தி.மு.க அரசுடன் எதிர்ப்பு, மறுபுறம் போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசின் கொள்கைகளை கண்மூடிதனமாக எதிர்ப்பதால் மத்திய அரசின் எதிர்ப்பு, இன்னொரு புறம் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றிய பகீர் அறிவிப்பு இவையெல்லாம் தாண்டி மக்கள் பரப்புரைக்கு சென்றால் மக்களே விரட்டியடிக்கும் நிகழ்வு என செல்லும் இடமெல்லாம் தி.மு.க'வினர் சேதாரமாகி வருவது யார் செய்த பாவமோ என மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News