மிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக இஸ்லாமிய படைத் திரள்கிறது என்று வேலூர் இப்ராஹிம் உடன் நின்றவாறு யூடிப்பர் முகம்மது அதுல்லா என்பவர் புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த ட்வீட்டிற்கு பலரும் தங்களது ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். கர்நாடகாவில் மிகவும் நேர்மையாகவும், துணிச்சல்மிக்கவராகவும் அண்ணாமலை தனது ஐ.பி.எஸ். பணியை செய்தார். அங்கு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு இவ்வளவு ரசிகர்களா என அரசியல் தலைவர்களே ஆச்சரியாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பா.ஜ.க. தலைவர் ஆனது முதலே அண்ணாமலைக்கு ரசிகர்கள் படை திரண்டுள்ளது. அதற்கு என்று சமூக வலைதளங்களிலும் ஆர்மி போன்று அமைப்புகள் ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் பா.ஜ.க. மத்தியில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்து வருகின்றனர். தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பத்தை அண்ணாமலை உடைத்துள்ளார்.
மேலும், வேலூர் இப்ராஹிம் பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் அவருக்கு பலர் மிரட்டல்களை விட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து தேசப்பணிகளுக்காக பா.ஜ.க.வில் பயணிப்பதாக பல கட்டுரைகளிலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருகின்றார். அதாவது இஸ்லாமியராக இருந்துக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியான பா.ஜ.க.வில் எப்படி சேரலாம் என்று வேலூர் இப்ராஹிம்க்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்கின்ற பிம்பம் உடைப்பட்டுள்ளது. இப்ராஹிம் கூறும்போது, நான் பா.ஜ.க.வில் இணைந்தது முதல் என்மீது பா.ஜ.க. தொண்டர்கள் பலர் அன்பை பொழிந்து வருகின்றனர். என்னிடம் அவர்கள் எவ்வித வேறுபாட்டையும் காண்பிப்பது இல்லை. அனைவரும் ஒன்றாக பயணித்து வருகின்றோம் என கூறியுள்ளார்.