"10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுரண்ட முடியாததால், கையை சுரண்டி வருகிறார்கள்" - தி.மு.க'வை தோலுரிக்கும் ஜெயக்குமார்

"10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுரண்ட முடியாததால், கையை சுரண்டி வருகிறார்கள்" - தி.மு.க'வை தோலுரிக்கும் ஜெயக்குமார்

Update: 2021-01-04 08:27 GMT

"தி.மு.க அகோர பசியில் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுரண்ட முடியாததால், கையை சுரண்டி வருகிறார்கள்" என  தி.மு.க'வினரின் உண்மை நிலையை தோலுரிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தரமணி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 ரூபாயையும் வழங்கினார்.

அப்போழுது செய்தியளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அ.தி.மு.க அரசு ஒருபோதும் அஞ்சாது. தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? எனக் கேள்வி எழுப்பினார். தி.மு.க ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை இருப்பவரே உண்மையான தலைவராக இருக்க முடியும் எனவும், கேள்விக்கு பதிலளிக்கும் தைரியம் இன்றி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "மாறன் சகோதரர்கள் ஒரு புறம், கனிமொழி ஒருபுறம், மு.க.அழகிரி ஒருபுறமென ஆட்சியை பிடிக்க தி.மு.க தரப்பில் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியை பிடிக்க வேண்டும் என தி.மு.க அகோர பசியில் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுரண்ட முடியாததால், கையை சுரண்டி வருகிறார்கள். எந்தவொரு சலசலப்புக்கும் அ.தி.மு.க அஞ்சாது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தான் மலரும்" என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

Similar News