சசிகலா விடுதலை அன்றே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., முடிவு.!

சசிகலா விடுதலை அன்றே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., முடிவு.!

Update: 2021-01-13 19:23 GMT

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் மிக பிரமாண்ட முறையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நடைபெற்று வந்த பணிகள் தற்பொழுது முடிவு பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவிடம் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதன்படி வருகிற 26ம் தேதி அல்லது 27ம் தேதி நினைவிடத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 27ம் தேதி சுபமுகூர்த்த தினமாகும். அன்றைய தினமே திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

ஒருவேளை அன்றைய நாளில் திறப்பு விழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நினைவிடம் திறக்கும் அதே நாளில்தான் சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரது வருகையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News