மதுரையில் ஜெயலலிதா கோயில் திறப்பு விழா.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பங்கேற்பு.!

மதுரையில் ஜெயலலிதா கோயில் திறப்பு விழா.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பங்கேற்பு.!

Update: 2021-01-30 09:07 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வருகிறார்.

தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக மதுரையில் மிகப்பெரிய கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த கோயில் மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் சிலைகள் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழாவிற்காக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கின்றனர். இதன் பின்னர் நடைபெறும் கோ பூஜையில் இருவரும் பங்கு பெறுகின்றனர். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News