பொது இடத்தில் ஒட்டிய போஸ்டரை அகற்றியதற்கு வக்காலத்து வாங்கும் கமல்.!

பொது இடத்தில் ஒட்டிய போஸ்டரை அகற்றியதற்கு வக்காலத்து வாங்கும் கமல்.!

Update: 2021-01-11 10:16 GMT

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்பொழுது இருந்தே தங்களது பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு முதல் பிரச்சார கூட்டத்தை சேலம் மாவட்டம், எடப்பாடியில் தொடங்கினார்.

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜகவும் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது பங்கிற்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு சென்று வருகிறார். அப்படி செல்லும் அவருக்கு அவரது கட்சியை சார்ந்த நிர்வாகிகள் வரவேற்பு பேனர் மற்றும் வால் போஸ்டர் அச்சடித்து வீதியில் ஒட்டி வைத்து வருகின்றனர்.

அதே போன்று கோவை மாவட்டத்திற்கு நேற்று கமல்ஹாசன் சென்றிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கோவை மாநகரில் உள்ள மேம்பாலம், மற்றும் பொது இடங்களில் வால் போஸ்டர்களை ஒட்டி வைத்தனர். அது போன்று மேம்பாலம் வேலை செய்யக்கூடிய இடத்தில் போஸ்டரை கமல் கட்சியினர் ஒட்டியுள்ளனர். இதனை பாலம் வேலை செய்யும் ஊழியர் அதனை அகற்றினார். அந்த இடத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்ற குறிகளுடன் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அப்போதுதான் அங்கே தடுப்புகள் இருக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதனை மறைத்து போஸ்டர் ஒட்டிவிட்டால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்துதான் அந்த இடத்தில் இருந்த கமல் போஸ்டர் அகற்றப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே’’ என்று பதிவிட்டிருந்தார்.

அவர் கட்சியினருக்குத்தான் அந்த இடம் வேலை செய்வது என்பவ தெரியவில்லை. கமலுக்கு ஏன் தெரியவில்லை அந்தப்பகுதியில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சியினரும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதை நிறுத்தினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Similar News