ரஜினியை சந்திக்கும் கமல்.. மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு கிடைக்குமா.?

ரஜினியை சந்திக்கும் கமல்.. மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு கிடைக்குமா.?

Update: 2020-12-31 12:05 GMT

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு ஒரு அறிக்கையை ட்விட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியை அளித்திருக்கும் என்றே கூறலார். இதற்கு காரணம் கொரோனா தொற்று மற்றும் தனது உடல்நிலையை கருதி இப்படி முடிவு எடுத்தாக கூறப்படுகிறது.

அவரிடம் பல அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்து ஆதரவை கேட்டு வருவதை காணமுடிகிறது. பேட்டியின் மூலமாக ரஜினி தங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாக அதிமுக, பாஜக, திமுகவினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் வரவை எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது ரஜினியின் ஆதரவு யாருக்காக இருக்கும்? அவர் யாருக்காக குரல் கொடுப்பார்? என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ரஜினியின் ஆதரவை கேட்பேன் என பகிரங்கமாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ரஜினியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றுடன் 3ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் கமல்ஹாசன், ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது அவர் ரஜினியிடம் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு தனது கட்சிக்கு ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கமல்ஹாசன் கட்சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? வரும் தேர்தலில் கமல் ரஜினி இருவரும் இணைந்து ஒரு மாறுதலை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Similar News