பூ கடையில் பூ வாங்கிவிட்டு காசு தராமல் கட்சி பெருமை பேசி அதனை ட்விட்டரில் பகிர்ந்த கனிமொழி.!

பூ கடையில் பூ வாங்கிவிட்டு காசு தராமல் கட்சி பெருமை பேசி அதனை ட்விட்டரில் பகிர்ந்த கனிமொழி.!

Update: 2020-12-05 09:46 GMT

ஒரு அரசியல் கட்சிக்கு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சிறை சென்ற நினைவுகள், ஆட்சியில் இருக்கும் போது செய்த சாதனைகள், கட்டிய அணைகள், சீர்திருத்த திட்டங்கள், தொண்டர்களின் எழுச்சி நினைவுகள் என பல விஷயங்கள் பெருமை பேச இருக்கலாம் ஆனால் கடையில் பொருளை வாங்கிவிட்டு காசு தராமல் ஏமாற்றுவதை பெருமையாக பேசும் ஒரு கட்சி தமிழக அளவில், ,ஏன் இன்னும் பார்க்க போனால் இந்திய அளவில் உண்டு எனில் அது திராவிட முன்னேற கழகம்'தான்.

ஓட்டலில் பிரியாணி தின்றுவிட்டு காசு கேட்டதிற்காக அடித்தனர், டீக்கடையில் டீ குடித்துவிட்டு காசு கேட்டதற்காக அடித்தனர், உணவகத்தில் பார்சல் வாங்கிவிட்டு காசு கேட்டதற்காக அடித்தனர், பஜ்ஜி தின்றுவிட்டு அதற்கு காசு கேட்டதற்காக அடித்தனர் என வியாபாரம் செய்து பிழைக்கும் மக்களிடம் பிடுங்கி தின்றுவிட்டு அவர்கள் காசு கேட்கும் பொழுது உடன்பிறப்புகளாகிய தி.மு.க காரர்கள் திருப்பி அடிக்கும் பழக்கத்தையே வைத்திருந்தனர்.

சரி கட்சி தொண்டர்கள் இப்படி இருக்க கட்சி தலைவர்கள் "இல்லை உடன்பிறப்புகளே கடையில் பொருள் வாங்கினால் காசு கொடுக்க வேண்டும்" என அறிவுறுத்தல் செய்வார்கள் என பார்த்தால் கட்சியின் தலைவர்கள் கடைக்காரரிடம் பொருளை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் வருவதை பெருமை பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க'வின் மகளிரணி தலைவியும், எம்.பி'யும், தி.மு.க தலைவரின் தங்கையுமான கனிமொழி தனது சுற்றுப்பயணத்தில் ஒரு பூ கடைக்காரரிடம் பூ வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் கட்சி பெருமை பேசி வந்துள்ளார். அதனை பெருமையாக வேறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கனிமொழி அவர்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்'ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது ஒரு கடைக்காரரிடம் பூ வாங்கியுள்ளார். அதற்கு காசு தர எண்ணியபோது கடைக்காரர் தி.மு.க'வின் சின்னத்தை பச்சை குத்தியுள்ளதை காட்டியதால் சிரித்துக்கொண்டே வந்துள்ளாராம்.

இதனை ஜம்பமாக வேறு ட்விட்டரில்  "சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் செல்வன் அவர்களிடம் வாங்கிய பூவுக்கு காசு கொடுக்க முயன்றேன். அவர் சிரித்துவிட்டு, கையில் பச்சை  குத்தியிருந்த உதய சூரியனை காட்டினார்" 
என பதிவிட்டுள்ளார்.

நியாயப்படி பார்த்தால் என்னதான் கட்சி தொண்டராக இருந்தாலும் அந்த பூ வியாபாரிக்கு அந்த பூ விலையில்லாமல் கிடைத்திருக்குமா? அப்படி இருக்கையில் அவரிடம் வலுக்கட்டாயமாக காசு கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டாமா? இப்படி தி.மு.க'வின் எம்.பி'யே பொருளுக்கு காசு தராமல் கட்சி பெருமை பேசிவிட்டு வந்தால் தொண்டர்கள் எப்படி காசு குடுப்பார்கள்? "நான் தி.மு.க'காரன்" என பெருமை பேசுவார்கள்.

அதை கடைக்காரன் கேட்கவில்லை என்றால் அடிப்பார்கள். இதைத்தான் திராவிட முன்னேற கழகம் விரும்புகிறதா? அல்லது இத்தனை நாள் வியாபாரி'களிடம் காசு தராமல் பிரச்சினை செய்து அடித்து துன்புறுத்தியதை உடன்பிறப்புகளுக்கு செய்ய சொல்லி திராவிடம் முன்னேற்ற கழகம் சொல்லி குடுத்ததா? இதனை தி.மு.க'தான் விளக்கி கூற வேண்டும்!

Similar News