20 சதவீத இடஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்திய கனிமொழி.. திமுகவில் உள்ள வன்னியர்கள் கொந்தளிப்பு.!

20 சதவீத இடஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்திய கனிமொழி.. திமுகவில் உள்ள வன்னியர்கள் கொந்தளிப்பு.!

Update: 2020-12-01 17:24 GMT

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தினை கையில் எடுத்திருக்கிறது என்று கனிமொழி எம்.பி., கூறிய கருத்து வன்னியர் சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சென்னையில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் கூறியிருந்தார்.
இவரது அழைப்பை ஏற்று பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களை சென்னைக்கு நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தும் காட்சிகளும் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கனிமொழி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இடஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என்று விமர்சனம் செய்துள்ளார்.


இவரது கருத்துக்கு திமுகவில் உள்ள வன்னியர்களே கொதித்துள்ளனர். இவரது கருத்து திமுகவின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும் எனறு ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கனிமொழியை போனில் தொடர்பு கொண்டு கண்டித்தாகவும் கூறப்படுகிறது. 

Similar News