கன்னியாகுமரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்.. தலைமை அறிவிப்பு.!

கன்னியாகுமரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்.. தலைமை அறிவிப்பு.!

Update: 2020-12-02 15:56 GMT

அதிமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, முன்னாள் இணைச்செயலாளர் பி.ஜி.கே.றாய் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திரு.பி.ஜி.கே றாய் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து பி.ஜி.கே.றாய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இதுதான் நடக்கும் என்று எனக்கு எப்பவோ தெரியும்.. கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.. இருப்பினும், இதுவரை என்னுடன் அண்ணன் தம்பி, அக்கா தங்கையாக சகஜமாக பழகிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.
 

Similar News