காலி நாற்காலிகளை பார்த்து பேசிய கருணாநிதியின் பேரன் உதயநிதி!

காலி நாற்காலிகளை பார்த்து பேசிய கருணாநிதியின் பேரன் உதயநிதி!

Update: 2020-12-22 16:16 GMT

தி.மு.க என்னதான் மக்கள் மத்தியில் கோடிகளில் செலவு செய்து விளம்பரபடுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள நினைத்தாலும் மக்கள் முன் அதன் தலைவர்கள் வந்து நிற்கும் போது தி.மு.க'வை பற்றி மக்கள் என்ன நினைத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது. அந்த வகையில் காலி நாற்காலிகளை பார்த்து பேசி விரக்தியடைந்த உதயநிதி பாதியில் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஓடிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.

சிதம்பரத்தில் தி.மு.க சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உதயநிதி பேசுவதாக அறிவித்திருந்தனர். பின் நிகழ்ச்சிக்கு முன் தாரை, தப்பட்டை மற்றும் மேளம் முழங்க ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அனைத்து மக்களும் கண்டுகளித்தனர்.

பின் "ஆஹா இவ்வளவு கூட்டமா?" என வியந்தபடியே மேடை ஏறி மைக் பிடித்த உதயநிதிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஆடலும், பாடலும் நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் உதயநிதி மேடை ஏறி மைக் பிடித்த உடன் இடத்தை காலி செய்தனர்.

உதயநிதியின் முகத்தில் ஈயாடவில்லை. மேலும் காலி நாற்காலிகளை பார்த்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது கருணாநிதியின் பேரனுக்கு. ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து பாதியில் பேச்சை முடித்துக்கொண்டு  வெளியேற துவங்கினார் உதயநிதி.

பின்னர் ஆர்வத்தில் சில உடன்பிறப்புகள் உதயநிதியிடம் கைகுலுக்க முண்டியடிக்கும் வேளையில் உதயநிதியை நம்பி மனு கொடுக்க வந்தவர் கடுப்பாகியுள்ளார். மனுவை வாங்காமல் மனுஷன் கை கொடுத்துத்துட்டு நிற்கிறாரே என விரக்தியடைந்ந அந்த நபர் மனுவை உதயநிதி முகத்தில் எறிந்ததால் உதயநிதி இன்னும் வெறுப்படைந்நு விருட்டென வெளியேறினார்.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதி தி.மு.க'வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Source - News J

Similar News