கேரள உள்ளாட்சித் தேர்தல்: பூத் அதிகாரியின் கால்களை வெட்டுவோம் என மிரட்டிய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: பூத் அதிகாரியின் கால்களை வெட்டுவோம் என மிரட்டிய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ!

Update: 2021-01-10 18:10 GMT

கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீகுமார் என்பவர் தான் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமா தொகுதியை சேர்ந்த சிபிஎம் MLA  குன்ஹிராமன் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டி கொண்டிருந்தார்.

 கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்பில் தேர்தல் நடந்தது. அப்பொழுது ஒரு சாவடியில் தலைமை அதிகாரியாக கடமையாற்றி கொண்டிருந்த ஸ்ரீகுமாரின் மிரட்டியதாக இந்தக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது.

 இதில் சுவாரசியமான விஷயமாக, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களின் TOKAI என்ற ஒரு கம்யூனிஸ்ட் சார்ந்த யூனியன் சங்கத்திற்கு ஸ்ரீகுமார் தலைவராவார்.

 அவர் வெளியிட்டுள்ள பதிவில் பாலக்கோடு கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமை அதிகாரியாக தான் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார் . டிசம்பர் 13ஆம் தேதி சாவடியை சென்று சேர்ந்தபோது மறுநாள் தேர்தல் நடக்கவிருந்தது. அப்பொழுது சிபிஎம் பூத் முகவர் தன்னிடம் வந்து முந்தைய தேர்தலில் இந்த சாவடி 94 சதவிகித வாக்குகளை பதிவு செய்திருந்தது. இந்த முறையும் அதையேதான் எதிர்பார்க்கிறோம் என்று மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இவர் ஒரு உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை கூட காண்பிக்காமல் பூத்தில் கடும் பிரச்சனையை உருவாக்கி வந்தனர்.

 இதற்கிடையில் உடுமா எம்எல்ஏ குன்ஹிராமன் கிராமத்தை அடைந்தார். அப்போது தலைமை அதிகாரி வாக்காளர் அடையாள அட்டை கோருவதாக அவரிடம் பூத் முகவர் புகார் அளித்தார். இதற்கு ஸ்ரீகுமாரிடம் வந்த எம்எல்ஏ, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கினால் உன் கால்களை வெட்டி விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார்.

 இளைஞர்கள் அந்த பூத்தை சுற்றி நின்று கொண்டிருந்ததாகவும் ஒரு, தாக்குதல் நடக்கவிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். தேர்தல் முடியும் வரை அவர் அந்த பூத்திலிருந்து காயப்படாமல் வெளியே செல்வார் என்ற உறுதியை கூட அவர் பெற முடியவில்லை என்று கூறினார். 

CPM MLA Kunhiraman (Left); Poll Officer SreeKumar (Right) 

 நிறைய வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வந்தனர். நான் அவற்றை கோரியபோது என்னை தாறுமாறாக திட்டி மிரட்டினர். நான் வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க வேண்டி இருந்தது. ஏனெனில் இரண்டு போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்தனர். வெளியில் இருந்த கும்பல் மிகவும் வன்முறை புரியும் நோக்கில் இருந்தது என்றார்.

 ஸ்ரீகுமார் ஏற்கனவே இந்த விவகாரத்தை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பதிலுக்காக காத்து இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா இதைக் குறித்து சட்டசபையில் குரல் எழுப்பினார். ஒரு அதிகாரியை மிரட்டிய குற்றத்திற்காக எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று கட்டங்களாக நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி முடிவடைந்து, டிசம்பர் 16ஆம் தேதி முடிவுகள் வெளிவந்தன இடதுசாரி கட்சிகள் பெருவாரியான வெற்றி பெற்றன. 

With inputs from: Organiser

Similar News