கிருஷ்ணகிரி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., வட்டாச்சியர் மீது தி.மு.க.வினர் தாக்குதல்.!

அதிமுக தொண்டர்கள் திமுகவினர் அராஜகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, அதிமுக நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

Update: 2021-04-06 11:35 GMT


 



கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதிகளில் சென்று கொண்டிருந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்., மற்றும் வட்டாட்சியர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வரும் சூழலில், திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் மீது மற்றும் வாக்குச்சாவடிகளில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட, எமக்கல்நத்தம் வாக்குச் சாவடியில் முன்னாள் எம்.எல்.ஏ., சி.வி.ராஜேந்திரன் மற்றும் பர்கூர் வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த திமுகவினர் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் திமுகவினர் அராஜகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, அதிமுக நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி உறுதி அளித்தனர். இதனையடுத்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். கிருஷ்ணகிரி முழுவதும் இந்த தகவல் காட்டுத்தீ போன்று பரவியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Similar News