விதிகளை காற்றில் பறக்கவிட்டு பிரச்சாரம் - கனிமொழி உட்பட 3500 தி.மு.கவினர் மீது வழக்கு.!

விதிகளை காற்றில் பறக்கவிட்டு பிரச்சாரம் - கனிமொழி உட்பட 3500 தி.மு.கவினர் மீது வழக்கு.!

Update: 2020-11-09 08:45 GMT

கொரோனா தொற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதால் தி.மு.க மகளிரணித் தலைவர் கனிமொழி உட்பட தி.மு.கவைச் சேர்ந்த 3500 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் அமர்ந்தபடியே காணொளி வாயிலாக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக ஒரு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் ஒரே நேரத்தில் 216 இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கனிமொழி உட்பட பல தி.மு.க‌ தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த கூட்டங்கள் நடைபெற்றன என்று தி.மு.கவினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டியதற்காக தி.மு.கவினர் மீது மொத்தம் 51 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் கனிமொழி மற்றும் 3 தி.மு.க எம்.எல்.ஏக்கள் உட்பட 3500 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், நோய் தொற்று பரவும் விதமாக கவனக்குறைவாக நடந்து கொள்ளுதல், தடை உத்தரவை மீறுதல் மற்றும் தொற்று நோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Similar News