குடிநீர் திட்டத்தை தடுத்த மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.! கிராம மக்கள் நோட்டீஸ் அடித்து கண்டனம்.!

குடிநீர் திட்டத்தை தடுத்த மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.! கிராம மக்கள் நோட்டீஸ் அடித்து கண்டனம்.!

Update: 2020-12-08 19:18 GMT

மதுரைக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இந்த புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றார்.

மேலும் அவர் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இந்த திட்டத்தால் மதுரை மாநகர் மற்றும் கிராம புறத்திலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ந்துவிடும் என கூறப்பட்ட நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., வெங்கடேசன் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகர், இந்திராநகர் மக்களின் நீண்டநாள் கனவான முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு குடிநர் பற்றாகுறையை தீர்க்கும் தமிழக அரசு திட்டத்தினை வரவிடாமல் தடுக்கும், சுயநலம் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசனை வன்மையாக கண்டிக்கின்றோம். இப்படிக்கு ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகர், இந்திராநகர் ஊர் பொதுமக்கள் என்று நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

Similar News