மதுராந்தகம்: தி.மு.க. ஆதரவுடன் சேர்மன் பதவியை கைப்பற்றிய அ.தி.மு.க!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Update: 2021-10-23 01:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றி அசத்தியுள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து மாவட்டங்களிலும் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனுவாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், 22 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கொண்ட மதுராந்தகத்தில் திமுக 10, அதிமுக 7, பாஜக 1, விடுதலை சிறுத்தைகள் 1, சுயேட்சைகள் 3 இடங்களை பெற்றது. ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், அதிமுகவை சேர்ந்த கீதா, திமுக சார்பில் ஒம்பிலால், பத்மபிரியா என்று மூன்று  பேர் போட்டியிட்டனர்.

அதில் கீதாவுக்கு 10 வாக்குகளும், பத்மபிரியாவுக்கு 7 வாக்குகளும், மற்றொரு திமுக வேட்பாளரான ஒப்பிலாலுக்கு 5 வாக்குகளும் கிடைத்தது. ஒருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குறைந்த வாக்குகள் பெற்ற ஓப்பிலால் விலகிக் கொண்டார். 2வது முறையாக கீதா, பத்மப்ரியாவுக்கு இடையே தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவினர் உட்பட 15 பேர் வாக்குகளை பெற்று அதிமுகவின் கீதா ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்றார். தமிழகத்தில் நேற்று நடைபெற்று முடிந்த மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக தில்லு முல்லு செய்து வெற்றி பெற்று பதவிகளை பிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளை போலீசாரை வைத்து விரட்டி அடித்த சம்பவங்களும் கரூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News