'இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்' - ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் கூறிய பொன்முடி

'ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்' என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-13 08:22 GMT

'ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்' என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37'வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற 1687 மாணவர்களுக்கும், பல்கலைக்கழக விழாவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கும் பட்டங்கள், தங்க பதக்கங்கள் நேரடியாக வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய பொன்முடி கூறியதாவது, 'பட்டம் பெறும் 240,445 பேரில் அதிகபட்சம் பெண்கள் இருக்கின்றனர் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என பாரதியார் பாடல்களை ஆளுநர் அடிக்கடி சொல்லுவார், தமிழக முதல்வர் ஸ்டாலினோ கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.


கல்வி, தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து மாணவர்கள் படிக்கும்போதே அனுபவங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல், இது தான் பெரியார் மண்' என்றார்.

மேலும் நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, இந்திக்கு எதிரானவர்களும் அல்ல, இந்தித் திணிப்பு வேண்டாம் என்பதை ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்' என கூறினார். சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழியான தமிழ் மொழியும் இருக்கும்பொழுது இந்தி திணிப்பிற்கு அண்ணா சொல்லிய கதையை கூறிய பொன்முடி 'இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் 'இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்' என அமைச்சர் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 18 Tamil nadu

Similar News