இந்து பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் மீது இல்லாத நடவடிக்கை முருகன் மீது எதற்கு?

இந்து பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் மீது இல்லாத நடவடிக்கை முருகன் மீது எதற்கு?

Update: 2020-11-07 09:32 GMT

பக்தியுடன் வேல் எடுத்த பா.ஜ.க தலைவர்கள் கைது, ஆனால் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று கூறிய திருமாவளவன் மீது வழக்கு கூட இல்லை இதுதானா இந்துக்கள் பெரும்பான்மையுடன் வாழும் நாடா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நவம்பர் 6ம் தேதி முதல் வரும் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் திருத்தணியில் துவங்கி முருகனின் அறுபடை வீடுகளில் அனைத்திலும் தொட்டு செல்லும் 'வேல் யாத்திரைக்கு தமிழக பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்தது. இதன் காரணமாக இன்று திருத்தணியில் யாத்திரையை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்காக பா.ஜ.கவினர் கடந்த சில நாட்களாகவே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தி.மு.க, திராவிடர் கழகம், வி.சி.க போன்ற இந்துக்களின் சித்தாந்த எதிரி கட்சிகள் இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என கூக்குரல் இட்டனர். மேலும் இந்த யாத்திரைக்கு கலவர சாயம் பூச முயற்சித்தனர்.

இதனால் தன் ஆட்சி மீது ஏதும் அவப்பெயர் வந்துவிடுமோ தேர்தல் நேரம் என ஆளும் அ.தி.மு.க அரசும் யாத்திரைக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் இந்த யாத்திரை செல்லும் பா.ஜ.க தலைவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்துக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட கூடாது இந்துக்கள் ஒற்றுமை எந்த காரணம் கொண்டும் ஏற்பட்டுவிட கூடாது என திராவிட கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன. அதிலும் தி.மு.க'வின் கூடாரத்தில் ஒண்டியிருக்கும் திராவிடர் கழகம், வி.சி.க போன்ற கட்சிகள் இந்துக்கள் விழிப்புணர்வோ, ஒற்றுமையோ ஏற்பட்டால் அத்துடன் தனது அரசியல் பிழைப்பு ஓடாது என நன்கு அறிந்து இந்துக்களின் ஒற்றுமையை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்ய அனுமதிப்பதில்லை.

இந்து வீட்டு பெண்களை விபச்சாரிகள் என இழிவுபடுத்திய திருமாவளவன் சுதந்திரமாக சுற்றுகிறார். மேலும் நான் கூறியதில் தப்பு ஏதும் இல்லை என்ற தோணியில் வலம் வருகிறார்.

ஆனால் இந்துக்களின் முக்கிய கடவுளான முருகப்பெருமானின் அம்சமான 'வேல்' வணங்குதலை அடிப்படையாக கொண்ட வேல் யாத்திரையை முன்னெடுத்த பா.ஜ.க தலைவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட கூட செல்ல இயலவில்லை. கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்படுகின்றனர், இந்ந நிலையில் உள்ளது இந்துக்களின் அவலம்.

இந்துக்கள் ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படாத வரையில் இது சாத்தியமில்லை.

Similar News