ஸ்டாலின் வழியில் உளறி கொட்டிய தென்சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் : பாராளுமன்றத்தில் கலகல சிரிப்பலை
ஒரு அரசியல்வாதிக்கு பேச்சு என்பது மிகவும் முக்கியமான திறன், அதனை பயன்படுத்தியே மக்கள் பலரை தன் பக்கம் திருப்புகிறார்கள். அந்த வகையில் ஒரு அரசியல்வாதி மேடையில் பேசும் பொழுது மக்கள் சந்தேகப்படாதபடி பேச வேண்டும் என்பதை விட, பேசுவதை குழப்பம் இல்லாமல் தெளிவாக பேசினாலே போதுமானதாகும். ஆனால் இவ்விரண்டையும் பொருட்படுத்தாமல் தன் நோக்கத்திற்கு பேசும் அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருப்பது தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின். இவரின் உளறல் பேச்சுகள் பல இடத்தில் அவர்களின் கட்சி நிர்வாகிகளையே தலையை பியிக்க வைத்துள்ளது.
தப்பு கணக்கு சொல்லி மாட்டிய முதல்வர்:
நாமக்கல் மாவட்டத்தின் பிரச்சாரத்தின் பொழுது பேசிய மு.க.ஸ்டாலின் மக்களிடையே நல்ல மதிப்புகளை பெற வேண்டும் என்பதற்காக புள்ளி விவரத்துடன் கூடிய ஒரு கணக்கை அவிழ்த்து விட்டார். அதாவது 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது திமுக கூட்டணி மொத்தம் 98 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த 98 இடங்களில் 89 இடங்கள் திமுகவும், எட்டு இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் வெற்றி பெற்றிருந்தது. அதோடு இந்த வெற்றியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால் திமுகவின் வெற்றி இடம் சட்டசபையில் 88 ஆனது. இந்த நிலையில் நாமக்கல் கூட்டத்தில் பேசும்பொழுது "திமுக கூட்டணியின் பலத்தைப் பற்றிய கணக்கை கூறும் பொழுது திமுக 87 இடங்களையும், காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் ஆக மொத்தம் 107 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக" கூறினார். இதனைக் கேட்ட திமுகவின் உடன்பிறப்புகளே தலையை முட்டிக் கொள்ளும் வகையில் நொந்து போனார்கள்.
மாணவிகள் மத்தியில் நடந்த உளறல்:
கடந்த 2023 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசும் பொழுது முதல்வர் ஸ்டாலின் "வேறுபாடு இல்லாமல் கற்பிக்கப்பட்ட என்பதற்கு பதிலாக கற்பழிக்கப்பட்ட" என்று உளறி மாணவிகள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார். இதனை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்து" 22 ஆண்டுகள்" ஆகிவிட்டதாக ஒரு கூட்டத்தில் பேசி அனைவரையும் பதப்பதைக்க வைத்தார். இவற்றிற்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேர்தல் தேதியையும் மாற்றி கூறி மக்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கும் ஆளானார் மு.க.ஸ்டாலின். இவர் போதாது என்று இவருடைய மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில திமுக நிர்வாகிகளும் உளறிக்கொட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உளறி பேசியது ஒட்டுமொத்த நாடாளுமன்ற அவையையும் கலகலக்க வைத்துள்ளது.