தமிழக முதல்வரிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த கேள்வி?

Update: 2025-02-26 11:24 GMT
தமிழக முதல்வரிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த கேள்வி?

மும்மொழி கொள்கை குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்காதது முதல்வர் ஸ்டாலின் ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, தி.மு.க தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தம் கட்சி உறுப்பினருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், நாம் எந்த மொழிக்கும் எதிரி இல்லை யார் எந்த மொழியை கற்பதிலும் தான் தடையாக நிற்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.


சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மொழிகளும் மும்மொழி கல்வியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்விக்கு இதுவரை முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்காமல் மறுத்து வருகிறார். போலி நாடகங்களில் இனி தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் திமுகவினர் தங்கள் சாயம் வெளுக்கப் போகின்றது என்று கூடிய விரைவில் அறிந்து கொள்வர். பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி? எளியவர்களுக்கு ஒரு நீதி? என்ற திமுக கட்சியின் நியதி மக்களிடையே ஒரு நாள் வெளிப்படையாக தெரிந்துவிடும்.

எது ஹிந்தி? எது ஆங்கிலம்? என்பதை உங்கள் கடிதத்தில் தெளிவாகக் கூறாமல் கட்சியினரை குழப்பம் அடைய வைத்து விடும். முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருப்பதினால் முன்மொழிக் கொள்கை வேண்டும் ஆனால் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கட்டும். என்று கூறுவது போல உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News