தி.மு.க குடும்ப கட்சியாக வளர்கிறது: தினகரன் குற்றச்சாட்டு!

Update: 2025-02-26 12:02 GMT

தமிழகத்தில் முன்மொழிக் கொள்கை வர முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது மாணவர்களின் அறிவை வளர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். மத்திய அரசு 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர மாட்டோம் என அவர் கூறியுள்ளது வியப்பாக உள்ளது என அ.ம.மு.கா பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டினார். ராமநாதபுரத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. நான்காண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைகுலைந்து உள்ளது.


மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை. மாணவர்கள் தங்கள் விரும்பும் மூன்றாவது மொழியாக ஹிந்தி, மலையாளம் கன்னடம்,தெலுங்கு என அவர்கள் தெரியாத மொழிகளை கற்றுக் கொள்ளலாம் அறிவை வளர்க்க. ஆனால் நமது தமிழக முதல்வர் ரூபாய் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் வர விட மாட்டோம் என கூறி இருப்பது மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.

பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதைப் பொருள் விற்பனை தற்போது உள்ள ஆட்சியில் தமிழகத்தின் எங்கும் பரவி கிடைக்கிறது. இதனால்தான் திமுக குடும்ப கட்சியாக வளர்கிறது.பிரதமர் மோடி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை. அவர்கள் நலத்திட்டங்களை திமுக அரசு மூடி மறைக்கிறது. தமிழகத்தில் ஜாதி மத கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்ய திமுக கட்சியினர் நினைக்கின்றனர். மக்கள் இனியாவது தெளிவான முடிவை எடுத்து 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற ஆதரிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News