அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த எல்லாருக்கும் எல்லாம்-தமிழக பட்ஜெட்!

எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சமூக நீதிக்கு எதிரானது என அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
அதாவது பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 3,752 ரூபாய் கோடி கூடுதலாக ஒதுக்கிடப்பட்டது ஆனால் தற்போது 2,725 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டு விட சுமார் ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கிடப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம பற்றிய எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு ஊழியர்களை தவிர தொழில் பொருளாதார வளர்ச்சி இல்லாத தென் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழகம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் மேலும் தென் தமிழகத்தின் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க மதுரை விமான நிலையத்திற்கு பல வெளிநாடுகளில் இருந்து நேரடி விமான சேவை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்
இதைத் தவிர நீண்ட கால மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்ற மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது