டாஸ்மாக் மதுக்கடைகள் முன் ஒட்டப் பட்ட முதல்வர் புகைப்படம்: தமிழக பா.ஜ.க நூதனப் போராட்டம்!

டாஸ்மாக் மதுக்கடைகள் முன், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டி பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டம், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இது உண்மைதான் ஏற்கனவே நேற்று முன்தினம் தான் பாஜக சார்பில் மது கடைகளை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் நடைபெற்றது ஆனால் அந்த போராட்டம் மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து போலீசார் அடைத்து வைத்திருந்தார்கள்.

தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊழலை கண்டித்து பாஜக சார்பில் டாஸ்மாக் நிறுவனம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்திற்கு புறப்பட்ட பா.ஜ., தலைவர்களை தமிழக போலீசார், பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதன் காரணமாக தற்போது நூதன முறையில் போஸ்டர் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.