சிறந்த மிகவும் புத்திசாலியானவர் பிரதமர் மோடி:புகழ்ந்து பேசிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்கப் பொருட்கள் மீதான புது தில்லியின் அதிக வரிகள் குறித்து கடந்த காலங்களில் விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் நேர்மறையான விளைவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று அது கொடூரமானது அவர்கள் மிகவும் புத்திசாலிகள் பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி மனிதர் என்னுடைய சிறந்த நண்பர் நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தை நடத்தினோம் இந்தியாவிற்கும் நமது நாட்டிற்கும் இடையே இது மிகவும் நன்றாக வேலை செய்யும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்
இந்தியாவின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப் உங்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளார்