
தமிழக பாஜகவின் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்த பதவிகளில் போட்டியிடுபவர்கள் ஏப்ரல் 11 மாநில தலைமை அலுவலகமாக உள்ள கமலாலயத்தில் விருப்பமான தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகிறது

அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பம் மனு தாக்கல் செய்தார் அதுமட்டுமின்றி நயினார் நாகேந்திரன் மட்டுமே மாநிலத் தலைவர் பதவிக்கு மனு அளித்திருந்ததால் அவர் போட்டியின்றி தமிழக பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பாஜக தேசிய பொறுப்பாளர்களான கிஷன் ரெட்டி தருண் சுக் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகிய கலந்து கொண்டனர் பிறகு தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டு அவருக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் 67 கட்சி மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்