முதல்வர் குடும்பத்திற்கு மட்டும் பயன் அளிக்கும் தொழில் கொள்கை: அண்ணாமலை விமர்சனம்!
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கொள்கை முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பலன் அடைவதற்காக உருவாக்கப்பட்டது என்று பாஜக காரிய கருத்தா அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளார். நேற்று மாலை முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலக அளவில் நிலை நிறுத்துவதில் தமிழ்நாடு பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொள்கை உருவாக்கப்பட்டதாகவும், உலக அளவில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில், சென்னையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் கூறியிருந்தார் இந்த ஒரு கொள்கை குறித்து தற்போது அண்ணாமலை அவர்கள் தன்னுடைய விமர்சனத்தை எழுப்பு இருக்கிறார்.அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்.எல்.பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். தமிழ்நாடு போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.