விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் உண்ணாவிரதம்:ஆதரவு தரும் பாஜக!

Update: 2025-04-19 16:36 GMT

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் சோமனூரில் நடைபெற்றது


போராட்டத்தை அடுத்து ஜவுளி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கோவை மாவட்ட கலெக்டர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தை தொடர்வது என உறுதி செய்தனர் 


இந்த நிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும் அரசை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்து வந்துள்ளார் 

Tags:    

Similar News