பஹல்காம் தாக்குதலுக்கு மோடி அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை ஆவேசம்!
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு மோடி அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். பயங்கரவாதிகள் பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இதை கண்டிக்கின்றோம் என்று சொல்வதை விட நம்முடைய அரசு கொடுக்கக்கூடிய பதிலடி கூட இதில் முக்கியமாக இருக்கப் போகிறது.
இந்த நேரத்தில் எல்லா மக்களும் அமைதியாக இருக்க வேண்டிய தருணம். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளை தவறான முறையில் மக்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றை முற்றிலும் ஆக தடுக்க வேண்டும். ஏனென்றால் தேவை இல்லாத பதட்டத்தையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கும்பல்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் இதை நம்பி பயங்கர அச்சத்திலும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள மத்திய அரசு தொடங்கிவிட்டது என்பதை அறியாமலும் இருக்கிறார்கள்.
அதனால் அரசு நிச்சயமாக இதற்கு எந்த நேரத்தில், எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமோ, கொடுப்பார்கள். அதற்காக மக்கள் நாம் செய்யக்கூடிய வேலையை நிறுத்தக்கூடாது. எல்லோரும் நம் வேலையை செய்ய வேண்டும். நம்முடைய அரசு, நிச்சயமாக ஒரு கடுமையான பதிலடி கொடுக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறினார்.