சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இப்படி பேசுவதா? காங்கிரஸ் எம்.பி ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Update: 2025-04-27 14:56 GMT

இந்தியாவினுடைய வரலாறு, புவியியல் என்று எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி அவதூராக இப்படி எல்லாம் பேசுவதா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2022-ல் பாரத் ஜோடா யாத்திரை சென்ற பொழுது, மகாராஷ்டிராவின் அகோலாவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை, பிரிட்டிஷாரின் பணியாள் என்றும், அதற்காக பிரிட்டிஷாரிடம் இருந்து பென்ஷன் பெற்றார் என்றும் விமர்சித்தார்.


இதையடுத்து, ராகுல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி.,யை சேர்ந்த நிருபேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர், மன்மோகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் அமர்வுக்கு வந்தது. ராகுல் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது, ராகுலுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News