காவல்துறைக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை விட வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு இதுவரை அமல்படுத்தாமல் காரணம் கூறிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம ஶ்ரீவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதாவது காவல்துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு கடுமையான பணிச் சூழல் எப்போதுமே நெருக்கடி எந்த உடல் கஷ்டங்களையும் வெளியில் சொல்லி ஓய்வெடுத்துக் கொள்ள முடியாத நிலை
போதை கலாச்சாரம் பயங்கரவாதம் அதிகரித்து வரும் கிரிமினல்களின் ஆதிக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இவற்றிற்கிடையே மனித உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிற குற்றச்சாட்டு இவை எல்லாம் காவல்துறை சந்தித்து வரும் நெருக்கடி அவர்களுக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை என்பது தான் அந்தப் பணிக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச அங்கீகாரமாக இருக்கும்
இந்த உயர்நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் ஒவ்வொரு காவலரின் உடல் நலனிலும் குடும்ப நலனிலும் நாம் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்